கற்றல் (Learning )
கற்றல் (Learning )
கற்றல் என்பது ஒருவரின் நடத்தையில் , மனப்பாங்கில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமாகும் . எனவே தான் உளவியலில் கற்றல் என்பது ஒருவனிடம் நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய அறிவு ,திறன் , மனப்பாங்கு ஆகிய மூன்று துறைகளிலும் ஏற்படுகின்ற நடத்தை மாற்றம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது .
கற்றலின் மூலமாக ஒருவரின் நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லையாயின் அவரது கற்றலின் விளைவு வெறும் பூச்சியமாகவே இருக்கும் . கற்றலின் மூலம் ஒருவரின் நடத்தையில், மனப்பாங்கில் நேர்மயமான முன்னேற்றம் ஏற்படுமாயின் அங்கு வெற்றிகரமான கற்றல் இடம்பெறுகின்றது .விளைவுகள் கற்றலின் நோக்கத்தை பூர்த்தி செய்கின்றது என்பதை அறிந்துகொள்ளலாம் . ஒருவர் ஒரு விடயத்தை கற்பதற்கு முன் இருந்த நடத்தையை விட கற்றலின் பின் உறுதியான நடத்தை மாற்றம் (Behavior Change ) இடம் பெற வேண்டும் .
கற்றல் எண்ணக்கருக்கள் (Concepts of Learning )
உளவியலில் இரண்டு வகையான கற்றல் எண்ணக்கருக்கள் முன்வைக்கப்படுகின்றன .
1. பயிற்சிக் கற்றல் அல்லது பழக்கக் கற்றல் (Habbit Learning )
2. உண்மைக் கற்றல் (True Learning )
பயிற்சிக் கற்றல் அல்லது பழக்கக் கற்றல் (Habbit Learning )
இவ்வெண்ணக்கரு நடத்தை வாத உளவியலாளர்களின் கற்றல் கொள்கையைப் பிரதிபலிக்கிறது .
உதாரணம் : சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொள்வது , நீச்சல் கற்றுக்கொள்வது
உண்மைக் கற்றல் (True Learning )
இவ்வெண்ணக்கரு gestalt உளவியலாளர்களின் கற்றல் கொள்கைகளை பிரதிபலிக்கிறது .
உதாரணமாக : சூத்திரங்களைப் பயன்படுத்தி கணக்குகளை தீர்க்க கற்றுக் கொள்ளல் .

source: teachmag.com
கற்றல் தொடர்பான கொள்கைகள் (Theories of Learning )
01. பார்லோவின் பழைய நிபந்தனைப்பாட்டுக் கொள்கை
(Parlo's classical Theory )
பர்லோர் , நிபந்தனைக்குட்படுத்தப்படாத ஒரு தூண்டிக்கான துலங்கள் செயற்பாட்டினை நிபந்தனைக்குட்படுத்தப்பட்ட துலங்களாக மாற்றம் செய்து நிலைப்படுத்தலே கற்றல் என்று குறிப்பிடுகின்றார் .
02. Gestalt கொள்கை
Gestalt என்பது ஜெர்மனியச் சொல்லாகும் .முழுமை , உருவம் போன்ற அர்த்தங்களை இச்சொல் கொண்டுள்ளது . கற்றல் என்பது மனிதனின் உளத்தொழிற்பாட்டிலேயே தங்கியுள்ளதாக இவர்கள் வாதிடுகின்றனர். நடத்தை உளவியலாளர்களுக்கு மாறுபட்ட கருத்துக்களையே இவர்கள் வலியுறுத்துகின்றனர் . koffka ,kother ,werthimer ஆகியோர் இவ்வாறான உளவியலாளர்கள் ஆவார்கள் . கற்றலானது அகக்காட்சி அல்லது புலக்காட்சி மூலமே நடைபெறுவதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர் . புலக்காட்சி என்பது புலன் உணர்ச்சி மூலமாக புலன்களைத் தூண்டிய தூண்டி பற்றிய விளக்கத்தைப் பெறுவதாகும் . இதனையே Gestalt உளவியலாளர்கள் கற்றலில் பிரயோகிக்கின்றனர் .
03. தோண்டைக்கின் கொள்கை
தூண்டல் துலங்கல் கொள்கை எனவே இக்கொள்கை அறியப்படுகிறது. கற்றல் செயற்பாடுகள் பற்றிய கொள்கையை முதன் முதலாக வெளியிட்டவர் தோண்டைக் ஆவார் . விலங்குகளின் செயற்பாடுகளை வைத்துப் பரிசோதனை செய்து அதன் மூலம் பெறப்பட்ட முடிவுகளைக் கொண்டு இக்கொள்கையை வெளியிட்டார் . ஆய்வுக்காக தோண்டைக் முதலில் ஒரு பூனையைப் பயன்படுத்தினார் .
பசி கொண்ட பூனையொன்றை கூடொன்றினுள் அடைத்து விட்டு அதன் முன்னாள் இறைச்சித் துண்டு ஒன்றையும் வைத்தார் .கூட்டைத் திறக்கக் கூடிய வழிகளையும் செய்து வைத்தார் .
இப்பரிசோதனையின் மூலம் "முயன்று தவறிக் கற்றல்" (Learning by error of Trial and error method ) என்ற விதியினை அறிமுகப்படுத்தினார் .
04. தொழில் நிபந்தனைப்பாட்டுக் கொள்கை (open conditioning theorey )
இக்கொள்கையை முன்வைத்தவர் ஸ்கின்னர் ஆவார் . ஒரு துலங்களுக்கு வழங்கப்படுகின்ற மீள்வலியுறுத்தல் செயற்பாடு மூலமே கற்றல் நடைபெறுகிறது என ஸ்கின்னர் விளக்கினார் . தூண்டியை வழங்கி துலங்களை மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்தலே மீளவலியுறுத்தல் எனப்படும் . பாராட்டுதல் , உற்சாகப்படுத்தல் , பாராட்டுதல் , பரிசு வழங்குதல் போன்ற செயற்பாடுகள் மீள வலியுறுத்தலுக்கான உதாரணங்களாகும் .ஸ்கின்னர் மீளவலியுறுத்தலை மூன்று வகையாக முன்வைத்தார் .
1.. நேர் மீளவலியுறுத்தல் : பாராட்டுதல்
2.. எதிர் மீளவலியுறுத்தல்
3. தண்டனை
கற்றல் தொடர்பான கொள்கைகளை நோக்கும் போது கற்றல் என்பது ஒருவரிடத்தில் ஏற்படுகின்ற வளர்ச்சி ,முன்னேற்றம் என்பதையே அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது . ஒருவரின் நடத்தைகளை வைத்தே அவரின் கற்றலின் ஆழத்தை அறிந்து கொள்ளலாம் .

No comments: