வெற்றிகரமான கற்றலுக்கான வழிகாட்டல்கள்

வெற்றிகரமான  கற்றலுக்கான வழிகாட்டல்கள்



கற்றல் என்பது எல்லாராலும் முடியுமான காரியமாகும் ,. என்றாலும் வெற்றிகரமாக  கற்றலை அமைத்துக்  கொள்பவர்களே  சாதனையாளர்களாக  வெற்றியாளர்களாக உருவாகின்றார்கள் .  அது வாழ்க்கையாக இருந்தாலும் சரியே பாடத்திட்டங்களாக இருந்தாலும் சரியே .
இங்கு  பாடத்திட்டங்களை சரியாக முறையாகக் கற்று  பரீட்சைகளில்  சித்தியடைவதற்கான இலகுவான வழிமுறைகள் பற்றி நோக்குவோம் .

படிப்பதற்கு  முன்பாக செய்ய  வேண்டியவை 
1 .   தூய்மையான சுவாசத்தைப் பெற்றுத்  தரக்கூடிய  இயற்கையின் காட் சிகள்  தென்படக்கூடிய ஓர் இடத்தைத் தெரிவுசெய்து கொள்ளுங்கள் .

இயற்கை வெளியாக இருக்கலாம் .அல்லது நீங்கள் அன்றாடம் படிக்கின்ற அறையாக இருந்தால் அதன ஜன்னல் , கதவுகளை உங்கள் வசதிக்கேற்றவாறு திறந்து விடுங்கள் . எப்படியோ உங்கள் கவனத்தைத் திசைதிருப்புகின்ற இடமாக இருக்கக்கூடாது .

ஏனென்றால் நீங்கள் ஒரு மூடிய அறைக்குள் இருந்து படிக்கும் போது  உங்கள் கண்பார்வை ஓரிடத்தில் மாத்திரம் சுருங்குவதால் விரைவில் கண்களில் அயர்வு ஏற்பட்டு உடலும் சோர்வடைந்து விடும் . இதனால் தான் அநேகமானவர்கள்   படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே  அயர்ந்து தூங்கிவிடுவார்கள் .
man reading book on beach near lake during daytime
https://images.unsplash.com

எனவே படிக்குபோது உங்களுடைய  பார்வை இடைக்கிடையே   சூழலில் நீண்ட  தூரம் பயணித்து வர வேண்டும் . நீல வானம் , பசுமையான மரங்களை பார்க்கும் போது கண்கள் குளிர்ச்சி அடையும் . மூளைக்கும் , உடலுக்கும் புத்துணர்வளிக்கும்


2 .   உங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள் . உடலுக்கு தளர்வான  மெல்லிய நிற மிருதுவான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள் .உங்களுக்கு விருப்பமான வாசனையையும் பூசிக்கொள்ளுங்கள் . பாடசாலைகளில் , பிரத்தியேக வகுப்பு நேரங்களின் போதும் கூட உங்கள் சப்பாத்து , shoe போன்றவற்றை கழற்றி அல்லது தளர்த்தி வையுங்கள் .

3. தண்ணீர் போத்தல் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் . இடைக்கிடையே     தேவையான அளவு அருந்திக்கொள்ளுங்கள் . அதிகம் அருந்துவதும்           இயற்கைத் தேவைகளை அதிகரித்து  நேரத்தை வீணாக்கலாம்,. 

4.  நொறுக்குத் தீனிகள் , தீனிப் பண்டங்கள்  போன்றவற்றை  முற்றாகத்            தவிர்த்துக் கொள்ளுங்கள் .  

அவை உங்கள் கவனத்தைத் திசை   திருப்புவதோடு   உங்கள்  தசைகளையும் அதிகம் செயற்பட வைத்து   உடலைக் களைப்படைய  வைக்கும்.
woman sitting on chair in front of table white reading book
https://images.unsplash.com


5.   பாடம் சார்ந்த தேவையான நூல்கள் , உபகரணங்கள் போன்றவற்றை               படிக்கும்   மேசையின்  பக்கத்தில்  எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .

6. இப்போது கதிரையில் அமர்ந்ததும் உங்கள் இரண்டு                                                     உள்ளங்கைகளையும்  ஒன்றுடனொன்று உரசி நன்றாகக் கசக்கி                        முகத்தையும் சற்று மசாஜ்  செய்யுங்கள்

.   அப்போது இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு  சுறுசுறுப்பு  ஏற்படுவதை உணர்ந்து        கொள்வீர்கள் .

7 .  பின்னர் சில நிமிடங்கள் கண்களை மெதுவாக ( இலேசாக ) மூடிய  படி           உங்கள் இலட்சியத்தை  மனதின் முன் கொண்டு வாருங்கள் .

8.   உங்களை நீங்களே கற்பனை செய்து கொண்டு  நன்றாக  உட்சாகமாகப்        புன்னகையுங்கள் . உங்களுக்குள்ளால் ஒரு புத்துணர்வை உணர்வீர்கள் .
9.  இப்போது புதுப் பொலிவுடன் படிக்க ஆரம்பியுங்கள் .

10. நீங்கள் எந்தப்  பாடத்தை எவ்வளவு நேரத்திற்குள் படிக்கப் போகிறீர்கள்       என்பதை  தீர்மானித்துக் கொள்ளுங்கள் .

படிக்கும் போது 

1.  வாசிக்கும் போது முக்கியமானது என்று உங்கள் மனது கருதுபவற்றை  குறித்து வைத்துக் கொள்ளுங்கள் . அல்லது புத்தகத்திலேயே அடையாளமிட்டுக்   கொள்ளுங்கள் .


2.  விளங்காதவற்றை மும்முறை மீண்டும் வாசித்துப் பாருங்கள் . அப்படியம் விளங்காவிட்டால்  அதற்கும் ஓர் அடையாளத்தை இடுங்கள் . பின்னர் அதனை விளங்கியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் .

3.  அனைத்தையும் நிதானமாக வாசியுங்கள் .

4.  குறிப்பிட்ட பாடத்தைப் படித்த பின் நீங்களே ஆசிரியராக மாறி அதனைப் படிப்பியுங்கள் . எழுதிப் படிப்பிக்கும் போது உங்களை அறியாமலே குறிப்பிட்ட பாடத்துக்கான வரைபுகள் , சுருக்கமான வழிமுறைகள்  என்பவற்றை உங்கள் மூளை தயார்செய்து வைத்திருப்பதை வெளிக்கொணர்வீர்கள் .

5.  ஏலவே குறிப்பிட்டது போன்று இடைக்கிடையே உங்கள் பார்வையை  இயற்கையை நோக்கி செலுத்துங்கள் . உற்சாகமாகப் புன்னகைத்துக் கொள்ளுங்கள் . தூக்கமின்றி நீண்ட நேரம் படிக்க அது உங்களுக்கு உதவி புரியும்.

woman standing writing on black chalkboard
https://images.unsplash.com

6.  இறுதியாக மூளை இனிப் போதும் என்று உணர்கின்ற போது படிப்பை நிறுத்தி விடுங்கள் . உங்களால் முடியுமாயின் படித்தவற்றை  மீள ஒரு முறை மீட்டிக் கொள்ளுங்கள் .

படித்து முடித்த பின்  
1. படித்த விடயங்கள் பற்றிய மேலதிகமான  விடயங்களை  தேடிவைத்துக் கொள்ளுங்கள் .
2. . படித்தவற்றை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .  மேலதிகமான  தேடிவைத்துக் கொண்ட விடயங்களை  சுவரசயமான முறையில் பகிர்ந்து கொள்ளுங்கள் .  இன்னும் தேடிக்கற்பதற்கான  ஆர்வத்தை அது அதிகரிக்கும் .

3. அன்றாட செயற்பாடுகளுடன் தொடர்புபடுபவற்றை  உரிய  சந்தர்ப்பங்களில் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

4. நண்பர்களுடனான  குழுக் கலந்துரையாடல்கள் , மீட்டல்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் . உங்கள் அறிவை , ஆற்றலை வளர்க்க அது உதவியாக அமையும் .

5. பாடம் தொடர்பான வினாக்களை நீங்களாகவே தேடி விடையெழுதி நீங்களே சரி பிழை பாருங்கள் . நீங்கள் படித்த பாடம் தொடர்பான உங்கள் அறிவை நீங்களே கணக்கிட்டுக் கொள்வீர்கள் .



Image result for success studying
          https://www.smore.com 



by : shaza

No comments:

Powered by Blogger.