ஆளுமைப் பெண்கள்

ஆளுமைப் பெண்கள் 

யுவான் ரிட்லி

 பிரிட்டனின்  முன்னணி  ஊடகவியலாளர் ஆவார் . 1958 ஏப்ரல் 23 பிரிட்டனின் டான்சி நகரில்  யுவான் ரிட்லி பிறந்தார்  .இளமைக்  காலத்தில் பத்திரிகையாளராக, ஊடகவியலாளராகஉருவாக  வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது.  "ஈவினிங் குரோனிக" என்ற பத்திரிகையில் தனது பதினான்காவது வயதிலேயே யுவான் ரிட்லி எழுத ஆரம்பித்தார். தனது பதினாறாவது வயதில்  அனைத்து தேசியப்  பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கினார் .  குறிப்பாக சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தொடர்ச்சியாக யுவான் ரிட்லி எழுதிவந்தார். அதன்பின்னர் இதழியல் கற்கை நெறியை இலண்டன்  கல்லூரியில் பயின்று அதனை பூர்த்தி செய்தார்.   இன்று ரெஸ்பெக்ட்  கட்சியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளராக இவர் ஈடுபட்டு வருகிறார்.  ஊடக உலகில் இவரைப்  பற்றித்  தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று கூறினால் அது மிகையல்ல. யுத்த களங்களுக்குள் பிரவேசித்து  செய்திகளை உடனுக்குடன் எடுத்து வருவது, உலகுக்கு அதனை வெளிப்படுத்துவது போன்ற ஊடுருவும் வேலைகளை செய்வதில்  தனி இடம் பிடித்தவர்.


Image result for image of yuvan ridley



 செப்டம்பர் 11 தாக்குதலைத்  தொடர்ந்து பிரிட்டனில் முன்னணி சண்டே எக்ஸ்பிரஸ் (sunday express )பத்திரிகை இவரை ஆப்கானிஸ்தானின் யுத்த களத்துக்கு அனுப்பி தகவல்களை சேகரித்து வருமாறு பணித்தது. ரிட்லியின்  முதல் ஊடுருவல் பயணம் இதுவாகவே அமைந்தது. அதன் பின்னர் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு செய்தி சேகரிக்க பல்வேறு விஜயங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  யுவான் ரிட்லி பத்திரிகையாளராக மட்டுமல்லாது வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். குறிப்பாக பிபிசியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக கடமையாற்றியுள்ளார். 


யுவான் ரிட்லி பெண்களுக்கு உரிய உரிமைகளுக்காக மிகவும் பாடுபட்ட ஒருவராக காணப்படுகின்றார். "Women in  Journalism "  எனும் அமைப்பை நிறுவுவதில் ரிட்லியின்  பங்கு அளப்பரியது. செப்டம்பர் 11 தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில்  நுழைந்து  செய்திகளை சேகரிப்பதற்காக  யுத்த களத்திற்கு சென்ற வேலை தாலிபான்களால்  சந்தேகிக்கப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டார்.  யுவான் ரிட்லியின் கைதைத் தொடர்ந்து  உலகம் முழுதும் எதிர்ப்பலைகள் தோன்றின . இவரது விடுதலை தொடர்பில் பல அழுத்தங்கள் தாலிபான்களை வந்து சேர்ந்தாலும் அவர் மீண்டும் காபூல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் .

2003 அக்டோபர்  2 வருடங்களின் பின்னர் யுவான் ரிட்லி தாலிபான்களால் விடுவிக்கப்பட்டார். பின்னாளில் தனது சிறை நாட்களை பற்றி  குறிப்பிடும்போது, " ஒரு  போர் கைதி உலகில் எந்த ஒரு ஜனநாயக நாடும் மதிக்காத அளவுக்கு மனிதாபிமானத்துடன் ஒரு பெண் என்ற வகையில் பாதுகாப்பையும் மரியாதையும் தாலிபான்கள் தனக்கு தந்தமை பேரதிர்ச்சியாக இருந்தது"  என்று குறிப்பிடுகின்றார். 

 சிறையிலிருந்து வெளிவந்த சில காலங்களிலேயே யுவான் ரிட்லி இஸ்லாத்தை தழுவினார். என்றாலும் அதன் பின்னர் அவரது எழுத்துப் பணியும் ஊடகப் பணியும் நின்றுவிடவில்லை. ஆரம்பத்தில் எழுத்துப் பணியில் சஞ்சிகைகளுக்கும்  பத்திரிகைகளுக்கும் எழுதுவதில் மாத்திரம் ஈடுபட்டிருந்த யுவான் ரிட்லி பின்னர் புத்தகம் எழுதும் பாதையில் செல்ல ஆரம்பித்தார். "Ticket  to  Paradise"  என்ற  நூலை  எழுதினார் .மேற்கு நாடுகளில் அவரது  புத்தகங்கள் அதிக கிராக்கி பெற்றன. அதன் பின்னர் பெண்கள் சுதந்திரம்,  இஸ்லாத்தில்  பெண்கள் சுதந்திரம் குறித்துப் பல கருத்துக்களை யுவான் ரிட்லி வெளியிட்டார்.  பெண்கள் ஒடுக்கப்படுவதை  கடுமையாக எதிர்த்துப் போராடினார்.   மனிதாபிமான உதவிகளை காசா ,மேற்குக் கரை,  ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அகதிகளுக்கு வழங்கினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடக்குமுறை நிகழ்ச்சிகளை,  சூழ்ச்சிகளை  வெளிப்படையாக பேசி எதிர்த்தார்.  இதனால் அவருக்கு பல வகைகளிலும் உயிர் அச்சுறுத்தல் வந்தபோதும் அரசியல் சமூக செயற்பாடுகளில் பின்வாங்காது செயற்பட்டார்.


தவக்குல் கர்மான் 

Image result for image of tawakkol karman


எமன் நாட்டில் 1979 பிப்ரவரி 7 ஆம் திகதி அறிவுத்துறையில் உயர்ந்து விளங்கிய தயிஸ் மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் சலீம் என்பவர் ஆவார்.  வழக்கறிஞரான இவர் அரசியல்வாதியாகவும் அமைச்சராகவும் செயல்பட்டார். இயல்பிலேயே அறிவு பின்னணி கொண்ட பிரதேசமும் வீட்டு சூழலும் தவக்குல் கர்மானுக்கு  கிடைத்திருந்தது. சிறுவயதில் இருந்தே கல்வியில் அதிக ஈடுபாடு கொண்டவர். அரசியல் விஞ்ஞான துறையில் பட்டதாரியாக பட்டம் பெற்று வெளியேறினார். பின்னர் அரசியல் செயற்பாட்டாளராக மாறினார்.


 பின்னர் ஊடகத்துறையில் தன்னுடைய ஆற்றல்களை வெளிப்படுத்த  தொடங்கினார். அதனடிப்படையில் " Women Journalists  without  Chain " என்ற அமைப்பை பெண்களின்  மனித உரிமைகளுக்கான அமைப்பாக தவக்குல் கர்மான் ஸ்தாபித்தார் .  இந்த அமைப்பில்  எமனின் அதிகமான பெண்கள் இணைந்து கொண்டார்கள்.  இதன் மூலம் பல பெண்களை ஒன்றிணைத்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் தேவையான வழிகாட்டல்களை பெண்களின் முன்மாதிரிகளை  தவக்குல் கர்மான் எடுத்தியம்பினார்.  எமனின்  ஜனநாயக நெருக்கடி, உரிமை மறுப்புக்களுக்கு எதிராகப்  போராடினார். 

ஆரம்பமாக எழுத்துக்கள் மூலம் தனது போராட்டத்தை ஆரம்பித்தார் .தேசிய, சர்வதேச பத்திரிகைகள் என அனைத்து பத்திரிகைகளுக்கும் தன்னுடைய கருத்துக்களை அச்சமின்றி எழுதத் தொடங்கினார்.  "yeman Times " என்ற பத்திரிகைக்கு எழுதிய ஒரு ஆக்கத்தில் 
"பிரச்சனையின் ஒரு பகுதியாக பெண்கள்  நோக்கப் படுவதை நிறுத்தி பெண்களை தீர்வின் ஒரு பகுதியாக நோக்கவேண்டும். வரலாற்றில் மிக நீண்ட காலமாக பெண்கள் அரசியல் வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் துணிச்சலுடன் சமூகத்தை நோக்கி நடைபோட வேண்டிய காலம் வந்துவிட்டது. 
என்ற கருத்தின் மூலம் அனேக பெண்களை அவர் ஈர்த்துக்கொண்டார்.   

இதன்பின்னர் எமனில் உள்ள அநேகமான பெண்கள் தவக்குல் கர்மான் உடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தனர்.  அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்படுவதற்கு கர்மானுக்கு  இது பலமாக அமைந்தது.  எனவே அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பெண்களும் இணைந்துகொண்டனர். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இதன் பால் அதிகமாக ஈர்க்கப்பட்டனர்.  தவக்குல் கர்மானின்  துணிச்சலான செயற்பாட்டால் அரசு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்தன . உயிர் அச்சுறுத்தல்கள்  ஏற்பட்டன. என்றாலும் அவரது துணிச்சலான  செயற்பாடுகள் நின்றுவிடவில்லை .

2011ஆம் ஆண்டு தவக்குல் கர்மான் காரில் சென்று கொண்டிருந்தபோது அரசினால்  கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் போராட்டங்கள் வலுத்தன . பல பக்கங்களில் இருந்தும் மாணவர்கள், பெண்கள் ,சமூக நலன் விரும்பிகள் , சிவில் சமூக நிறுவனங்கள் என அனைவரும் தவக்குல் கர்மானின் விடுதலைக்காகப் போராடத் தொடங்கினர்.  2011 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி தவக்குல் கர்மான் கைதுசெய்யப்பட்டு மக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஜனவரி 29 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.

 இதன் பின்னர் அப்போதைய எமனின் ஆட்சியாளர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின்  ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியை  ஏற்படுத்துவதில் முக்கிய பங்கெடுத்து செயற்பட்டார்.  தவக்குல் கர்மானின் ஊடக அமைப்பு மற்றும்  பெண்கள் அமைப்பு போன்றவை இதற்கு  முழு ஆதரவையும் வழங்கின. அரபு வசந்தத்தின் ஒரு முக்கிய நிகழ்வான யெமனியப் புரட்ச்சிக்கு  இவரே காரணமாக இருந்தார் . இதனால்தான்  யெமனியர்களால்   "இரும்புச் சீமாட்டி( Iron Lady )" என்றும் " புரட்சியின் தாய்" என்றும்  தவக்குல் கர்மான் வர்ணிக்கப்படுகிறார். 

 தவக்குல் கர்மான் இன் வீரியமிக்க, துணிச்சலான செயற்பாடுகளை அவதானித்த சர்வதேசம் 2011ஆம் ஆண்டு சர்வதேச சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு தவக்குல் கர்மானை   தேர்ந்தெடுத்தது.  2011ல் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற மூன்று பெண்களில் முதல் விருது பெற்ற அரபு பெண்,  முதல் யெமனியர் என்ற பெருமையை  தவக்குல் கர்மான் பெற்றுக்கொண்டார் . 100 ஆண்டுகளுக்கு மேலாக  வழங்கப்படும் நோபல் பரிசு வரலாற்றில் இதுவரையில் 12 பெண்களே தெரிவாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது ..


டாலியா முஜாஹித் 

Image result for image of dalia mogahed


எகிப்து நாட்டை  பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் நிர்வாகத்துறையில் முதுநிலை பட்டத்தை பெற்றார். தற்போது அமெரிக்காவின் அரசியல் செயற்பாட்டாளராக ஆலோசகராக சிறுபான்மை சமூகத்தின் சின்னமாக  செயல்பட்டு வருகிறார். வெள்ளை மாளிகையில் பணியாற்றிய முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமை இவருக்கு உரியது. வெள்ளை மாளிகையில் பணியாற்றி முதல் முஸ்லிம் பெண்ணாக மட்டுமல்லாது  இவர் எழுத்தாளராக,  ஊடகவியலாளராக சமூக செயற்பாட்டாளராக காணப்படுகின்றார். " இஸ்லாமியக் கற்கைகளுக்கான அமெரிக்கர் நிலையம் " என்ற நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றுகிறார். இவரது" what a billion muslim really think? "என்ற நூல் பிரபல்யமானது. சர்வதேச முஸ்லிம் பெண் சமூகம் கண்டுபிடிப்பாளர்களாக , ஆய்வாளர்களாக, நல்ல தாய்மார்களாக உருவாக  வேண்டும் என்று டாலியா மற்ற பெண்களுக்கு  அழைப்பு விடுக்கின்றார். தற்போதைய முஸ்லிம் பெண்களிடத்தில் மனப்பாங்கு மாற்றம் முக்கியமானது என்பதை அவர்  விசேடமாகக் குறிப்பிடுகின்றார் .

No comments:

Powered by Blogger.