1990 பலவந்த வெளியேற்றம்

1990  பலவந்த வெளியேற்றம் 

வரலாறு  விட்டுச்சென்ற ஆறாத காயங்களுள் ஒன்றாகவே   1990  வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் காணப்படுகிறது. ஜனநாயகம் சிறையில் அடைக்கப்பட்டு நூற்றாண்டுகால பூர்வீக மக்கள் துப்பாக்கி முனைகளால் வேர் அறுக்கப்பட்ட வரலாறு 1990 இல் இடம்பெற்றது. மகா வம்சத்தின் தரவின் படி வடமாகாண முஸ்லிம்கள்  பாரம்பரியமாக வாழ்ந்துள்ளனர் , 2300 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் சோநகர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. 

Image result for jaffna map


 பத்து நூற்றாண்டுகளுக்கு மேலான பூர்வீக வரலாற்றை வட மாகாண முளிம்கள்  கொண்டுள்ளனர் .ஏழாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வியாபாரத்தின் அடியாக இஸ்லாம் பரவியது . முத்துக்குளித்தல், வியாபாரம் ,கடல் போக்குவரத்து, வர்த்தகம் போன்றவற்றில் வடமாகாண முஸ்லிம்கள் முன்னிலை வகித்தனர் . 

வரலாற்றாசிரியர் இப்னு பதூதா அவர்களின்  கருத்துப்படி வடமாகாணத்தின் நல்லூரில் வர்த்தகத்தில் பிரதான இடத்தை வகித்தவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.  இதற்கு சான்றாக சோனக தெரு , சோனகத் தோப்பு  என பல பெயர்களை கொண்ட பகுதிகள் காணப்படுகின்றன . மேலும் நல்லூரை அண்டிய பகுதி சோனக தோப்பு என அழைக்கப்படுகின்றது அதேபோன்று இந்த பகுதிகளில் காணப்படும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் காணப்படுவதும் வடமாகாண  முஸ்லிம்களின் பூர்வீக பூர்வீகத்தை எடுத்தியம்புகிறது.

1881 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி வடமாகாணத்தில் முஸ்லிம்கள்  வாழ்ந்துள்ளனர் என்பதனை அறிந்து கொள்ளலாம். 1.6 வீதமான முஸ்லிம்கள் வட மாகாணத்தில் வாழ்ந்ததாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன .

"கிறிஸ்துவுக்குப் பின் இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையில் வர்த்தகம் முற்றாக அரேபியர்களின் கைகளிலேயே இருந்தது . ஏழாம்  நூற்றாண்டின்  தொடக்கத்தில்  இலங்கையுடனான சீனவர்த்தகம்  முன்னிலை வகித்தது. என்றாலும் எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கை துறைமுகப் பகுதிகளில் கணிசமான அரபிகள்  குடியிருந்தனர் ."என்று  தோமஸ் அர்னால்ட் என்பவர் தனது " Preaching of Islam " என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் .   

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வியாபார ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இருந்த வேளை   அதனை அழிப்பதற்காக போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் . இதனால் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை அண்டியுள்ள பல பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்தார்கள் .ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டதால் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறினர். இந்த பின்னணியிலேயே 1990 காலப் பகுதி வரையில் முஸ்லிம்களும் சமூகத்தினரும் மிகவும் அந்நியோன்யமாக சகோதரத்துவத்தோடு வாழ்ந்துவந்தனர்.  1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் .

1990 வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம் 

1990  க்கு முற்பட்ட காலத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து வாழ்ந்தாலும், சுதந்திரமாக இருந்தாலும்1990  ஆம் ஆண்டு இடம்பெற்ற சில கசப்பான சம்பவங்கள் , வரலாற்றுத் தவறுகள்  காரணமாக இந்நிலை மாறியது . 

அதாவது முஸ்லிம்களில் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு உளவு வேலை பார்த்தனர் என்ற குற்றச்சாட்டையும்  முஸ்லீம் காங்கிரஸின் தோற்றம் , அரசாங்கம்  ஊர்க்காவல் படையில் முஸ்லிம்களை  இணைத்துக் கொண்டமை , ஆயுதங்களை அளித்தமை  போன்ற காரணங்களினைப் பின்னணியாகக் கொண்டு  யாழ்ப்பாண முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டனர்.

1990 காலப்பகுதியில் கிழக்கு மாகாண தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான இன முறுகல் வளர்ச்சி பெற்றது . ஆனால்வட மாகாணம் குறிப்பாக  யாழ்ப்பாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவு சீராகவே காணப்பட்டது . வடமாகாண முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதனை  விரும்பாத தீயசக்திகள் வடமாகாண முஸ்லிம்களை பழிவாங்க திட்டம் தீட்டினார் . அதன் விளைவாகவே 1990 ஆம் ஆண்டு  பலவந்த வெளியேற்றம் இடம் பெற்றது.


  • இனச் சுத்திகரிப்பின் முதற்கட்டமாக  1990 ஒக்டோபர் 15 சாவகச்சேரியில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர்.  
  • 1990 அக்டோபர் 21இல்  எருக்கலம்பிட்டி எனும் செல்வ செழிப்புமிக்க கிராமம் சூறையாடப்பட்டது .
  •  1990 அக்டோபர் 23  மறிச்சுக்கட்டி யில் உள்ள முசலி  எனும் இடத்திலிருந்து அனைத்து முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர்.
  • அக்டோபர் 23 கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம்கள் வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டது.
  • 1 990 ஒக்டோபர் 24 மன்னார் முஸ்லிம்கள்  வெளியேற்றப்பட்டனர்.  
  • அக்டோபர் 30 யாழ்ப்பாணத்தில் இருந்து அனைத்து முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர்.       
 ஒவ்வொரு குடும்பமும்  2000  ரூபாய் ரொக்கப்பணம் ஒரு சில பயனப்  பொதிகள்  மாத்திரமே எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  பெண்கள் துன்புறுத்தப்பட்டனர் .வயோதிபர் ,சிறுவர்கள் என அனைவரும் ஈவிரக்கமின்றி கால்நடையாகவே வெளியேறுவதற்கு கட்டளையிடப்பட்டது. முஸ்லிம்களின் சொத்துக்கள் , செல்வங்கள் ,உரிமைகள் என அனைத்துமே 1990 ஒக்டோபர் முடிவோடு புலிகளின் கைகளுக்குள் முஸ்லிம்களின் சொத்துக்கள், உரிமைகள் , சொந்தங்கள் எல்லாம் சுருட்டப்பட்டது .

அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் முஸ்லிம்களின்  சொத்துக்களையும் , விளைநிலங்களையும் விற்றார்கள் .வீட்டுப் பொருட்கள் ,  பயன்பாட்டுப் பொருட்களை கடைகளில் விற்றார்கள் . 

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிமுகாம்களில் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் மிகவும் கஷ்டத்துடன் வட மாகாண முஸ்லிம்கள்  தங்கி வாழ்ந்தார்கள் .


வடமாகாண முஸ்லிம்களின் சொத்து இழப்புகள் பற்றிய புள்ளிவிபரங்களை பேராதனை பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் " இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும் " என்ற அவரது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.


  • குடும்ப ரீதியான இறப்புகள்                                      5408 மில்லியன் 
  • நிறுவன ரீதியான இழப்புகள்                                   2107 மில்லியன் 
  • சமய ரீதியான இழப்புக்கள்                                        640 மில்லியன் 
  • விவசாயக் காணிகள் ரீதியான இழப்புக்கள்        180 மில்லியன் 
  • மொத்த இழப்புக்கள்                                                      8  335 மில்லியன்.
வரலாற்றில் இன்னும் மீளப் பெற முடியாத செலவங்களாகவே இவ் இழப்புக்கள் காணப்படுகின்றன .



No comments:

Powered by Blogger.