மனவெழுச்சி (Emotions)

மனவெழுச்சி (Emotions)

மனவெழுச்சியை  குறிக்கும் ஆங்கிலச் சொல் Emotion என்பதாகும்.  இலத்தீன் மொழிச் சொல்லான emovere  என்கிற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும் .   இதற்கு வெளிப்படுத்து,  தூண்டு  என்று அர்த்தமாகும்.  

 மனவெழுச்சி என்பது செயல்களை ஊக்குவிக்கும் ஒரு செயற்பாடு . அதாவது தூண்டல் ஒன்றின் காரணமாக ஏற்படுகின்ற துலங்கள்  என்றும் குறிப்பிடலாம். மனவெழுச்சி எனும்போது கோபம், அழுகை, பதற்றம், அச்சம் ,கவலை எரிச்சல்  போன்ற விடயங்களே  அனேகமானவர்கள் மனக்கண் முன் தோன்றும். ஆனால் சந்தோசம், களிப்பு , வெட்கம், விருப்பம் போன்றவையும் மனவெழுச்சியாகவே  காணப்படுகின்றன . 

Image result for IMAGE OF EMOTIONS


மனவெழுச்சிகளைப் பொருத்த வரையில் அடிப்படையிலே அமைந்த  மனவெழுச்சிகளும் காணப்படுகின்றன . சில செயற்பாடுகளினால் ,சூழலினால் உருவாக்குகின்ற மனவெழுச்சிகளும்  காணப்படுகின்றன.  மனிதன் பிறக்கும் போதே அவனுடன்  மனவெழுச்சிகளும்  இயல்பாகவே பிறந்து விடுகின்றன. மனிதன் வளர்வது போன்று படிப்படியாக மனவெழுச்சிகளும்  வளர்ச்சி அடைகின்றன. 

ஒரு  மனிதனுடைய மனவெழுச்சியில்  அவனுடைய பரம்பரை இயல்பு மற்றும் சூழல் ஆகியன தாக்கம் செலுத்துவதாக காணப்படும். சமாதானம், அன்பு, பாசம், கருணை நிறைந்த சூழலில் வாழ்கின்ற ஒரு மனிதனின் மனவெழுச்சிக்கும்  சண்டை ,  எரிச்சல், வெறுப்பு ,போன்றவற்றுக்கு மத்தியில் வளர்கின்ற ஒரு மனிதனின் மனவெழுச்சிக்கும்   இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படும்.

 sylantomkins  என்ற  உளவியலாளர் அடிப்படை மனவெழுச்சி எட்டுவகையாக  காணப்படுகின்றது என்று குறிப்பிடுகின்றார்.   விருப்பம், மகிழ்ச்சி , வேதனை, பயம், வெட்கம், அவமதிப்பு, கோபம் என்பனவே அவையாகும் என்கிறார். அதேபோன்று Robert Plutchik  என்பவர் எட்டு அடிப்படை மனவெழுச்சிகள் காணப்படுவதாக குறிப்பிடுகின்றார். உற்சாகம், பயம், அதிசயம் ,துன்பம் , அருவருப்பு, கோபம் ,எதிர்பார்ப்பு என்பனவே அவையாகும் என்கிறார் . இந்த அடிப்படை மனவெழுச்சிகள் மனிதர்கள் யாவருக்கும்  சமனான ஒன்றாக காணப்படுகின்றது. என்றாலும் அவை ஏற்படும் அல்லது வெளிப்படுத்தப்படும் அளவில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன .

 மனவெழுச்சிகள் இன் மூலமாக உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன . அதேசமயம் மனவெழுச்சியினை  ஒருவரால் அனுபவிக்க மாத்திரமே  முடியும்.  வெளிப்படுத்தப்படும் நடத்தைகளின் ஊடாக  மற்றவர்கள் ஓரளவு அவற்றினை அறிந்து கொள்ளலாம். அதாவது உடலசைவு மொழிகள் (body language )    மூலமாகவும் விளங்கிக்கொள்ளலாம். குறிப்பாக ஏசுதல் ,அடித்தல், அதிர்ச்சி போன்ற செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. இதேபோன்று ஒவ்வொருவரும் இந்த உடல் மொழியை வெவ்வேறு விதமான முறையில் கொண்டிருப்பர். அதற்கேற்ப மனவெழுச்சியின்  தாக்கம் காணப்படும் , ஏனையவர்களால் புரிந்து கொள்ளப்படும் . 
உதாரணமாக  சிலர் ஏசும்போது நிதானமாக இருப்பது போன்றே ஏசுவர். இன்னும் சிலர் ஏசுவது மிகவும்  ஆவேசமான உடல்மொழியில்  ஏசுவர். 

மனவெழுச்சிகளினால் நிகழும் உடலியல் மாற்றங்களாக முகபாவம்மாற்றம்  முகம் சிவத்தல் ,குரல் பலமாக வெளிப்படுத்தப்படல் , கண்ணின் அமைப்பு மற்றும்  நிறம் மாறல் , நடுக்கம் ,மௌனம் , வெளியேறுதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

 அதேபோல் உள்ளார்ந்த மாற்றங்களாக கவலை, அழுதல்  போன்றவற்றை குறிப்பிடலாம். குறிப்பாக மனவெழுச்சிகள் இன் செயற்பாட்டில் நரம்புத்தொகுதி சம்பந்தப்பட்டிருப்பதால் இதயத்துடிப்பு , குருதியமுக்கம் , நாடித்துடிப்பு மாற்றம் போன்ற உடல்இயக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கோபம், அச்சம்  ஆகியவற்றுக்கு ஏற்ப  இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இதனால் குருதிச் சுற்றோட்டம் விரைவுபடுத்துகிறது. இதனாலேயே கோபப்படும்போது அதிகமானவர்கள் சிவந்து போவதைக்  காணலாம்.  அதிர்ச்சியின் போது கண்மணி விரிவடைந்து உள்ளே ஒளி புக வாய்ப்பளித்து பார்வைகளை அதிகரிக்கிறது. வியர்வை சுரப்பிகள் அதிகம் சுரந்து உஷ்ணத்தை  ஏற்படுத்துகின்றது. இவ்வாறான பல உடலியல் மாற்றங்கள் மனவெழுச்சிகளினால் ஏற்படுகின்றன. 

பொதுவாக மனவெழுச்சிகள் 
 1. சாதாரண அல்லது சாதகமான மனவளர்ச்சி 
 2. பாதகமான மனவெழுச்சி 

சாதகமான மனவெழுச்சி என்பது  மனவெழுச்சியின்  பின் சாதகமான விளைவுகளை உண்டுபண்ணும் செயற்பாடு ஆகும் . அதாவது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் விளைவுகளை தரும். உதாரணமாக சந்தோஷம், மகிழ்ச்சி , 
இனிய நினைவுகள்,  இனிய அனுபவங்கள் கருணை போன்ற இன்பமான மனவெழுச்சிகள்.  இதனால் உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் ஏற்பட்ட நல்ல நடத்தைகள் உருவாக்கப்படுகின்றன .இதனால் சாதகமான மனவெழுச்சியாக  இது குறிப்பிடப் படுகின்றது . 

பாதகமான மனவெழுச்சி என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் பாதகத்தை ஏதாவது தீங்கினை உண்டாக்கும் செயற்பாடு ஆகும் . உதாரணமாக கோபம் கவலை, சினம் ,எரிச்சல் மற்றவர்களுடன் எரிந்து விழுதல்  போன்றனவாகும்.பாதகமான மனவெழுச்சியானது  தனிமனித வாழ்வினை  வெகுவாகப்  பாதிக்கும். அச்சம், சினம், கவலை ,பொறாமை பெருமை,   பதற்றம் ,அவசரம் போன்ற பல தீவிர, தீய நடத்தைகளை பாதகமான மனவெழுச்சி உண்டுபண்ணி விடும்.

  பாதகமான மனவெழுச்சிகள் பற்றி சற்று கவனமாகவே இருக்க வேண்டும். இத்தகைய மனவெழுச்சிகள் நான்கு வகையான சிக்கல் நிலைகளை தோற்றுவிக்கின்றன.
 1. ஒழுக்க சிக்கல்கள் அதாவது நெறிபிறழ்வு 
2. உணவு சிக்கல்கள் அசாதாரணமான உணவுமுறை 
3. வளர்ச்சி குறைபாடுகள் , பின்வாங்கல் 

வளர்ச்சி குறைபாடுகளாலே  கற்றல் தொடர்பான குறைபாடுகளும்   பிரச்சினைகளும்ஏற்படுகின்றன . 

பாதகமான  மனவெழுச்சியினைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்  



    •  எப்போதும் மனதினை  உறுதியாக வைத்திருத்தல்.
    •  நிதானமாக வேலைகளை செய்யப் பழகிக் கொள்ளல் . 
    • மனவெழுச்சிகள் பற்றிய அறிவை கொண்டிருத்தல் .
    •  மனவெழுச்சிகளைக்  கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வாசித்து தெரிந்து வைத்திருத்தல் .
    • மௌனமாக இருத்தல் 
    • தியானம் செய்தல் 
    • எப்போதும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விஷயங்களை புரிந்து கொள்ள பழகிக் கொள்ளல் .
    • பாதகமான மனவெழுச்சிகள் ஏற்படும் போது இருக்கும் இடத்தை , சூழலை மாற்றல் . 
             by : shaza

    No comments:

    Powered by Blogger.