மெளனம் ஓர் அழகிய மொழி

                              மெளனம் ஓர்  அழகிய மொழி
           ஏதோ ஒரு வகையில் எல்லோரும்  மெளனத்தை ஆராதிப்பவர்கள் தான் .
           ஓயாது பேசிக் கொண்டே இருப்பவர்கள்   கூட சில நேரங்களில் மெளனத்தை
           இரவலாகப் பெற்றுக்கொள்கிறார்கள் .

                           "மெளனம் ஒரு அழகிய வெளி 
                            அதில் உலா வருபவர்கள் என்றுமே 
                            மென்மையானவர்கள் 
                            சிலரில் மேன்மையானவர்களும் கூட ."


Click here for the poem  

(கவிதையின் கோப்பு வடிவத்தைப் பெற்றுக் கொள்ள மேலே க்ளிக் செய்யுங்கள் .)                                                                     

உண்மையில் மெளனம் பல சிக்கல்களுக்கான சிறந்த தீர்வு தான்.
                             அனுபவம் ஒரு சிறந்த ஆசான்  என்பது  போல்  மெளனம் ஒரு சிறந்த தீர்வு.

என்றாலும் அர்த்தமற்ற மெளனங்கள்  எப்போதும் அழிவிற்கே  வழிகோலும் என்கிறேன் .
அவற்றில் தீர்வுக்கோ அல்லது  நிம்மதிக்கோ அல்லது அழகிற்கோ அல்லது மேன்மைக்கோ அல்லது மென்மைக்கோ  இடம்  கிடையாது . அங்கு கோழைத்தனம்  பொடுபோக்கு தன்மைகள் இருப்பதற்கு நிறையவே சாத்தியங்கள் இருக்கின்றன .

"உண்மையான மெளனம்  கலைகின்ற போது அங்கே கனவுகளின் சாட்ச்சியங்களை , நிஜங்களின்   நியதிகளைக் கண்டு கொள்ளலாம். "
(இதற்குள் பல அர்த்தங்கள் மறைந்து இருக்கின்றன . சற்று அகலத் திறந்து  மெளனமாக சிந்தியுங்கள் . விடை உங்கள் மெளனத்துக்குள் தான் ஒழிந்து கிடக்கின்றது .)
https://www.pexels.com




















   இறைவா உன்னிடம்

இறைவா  இரு கரமேந்தி  
இதயத்தால்   கேற்கிறேன் .
இதயம் முழுக்க இக்லாஸைத் தா ..........................
உன் மீது கொண்ட பயத்தால் 
கேற்கிறேன் இறைவா 
என் வாழ்க்கைப் பக்கங்கள் முழுவதிலும் 
பணிவு என்ற பண்பைப் 
பூரணமாய்த் தா........................................ 

இமயமளவு உயர்ந்தாலும் 

இருப்பிடமின்றித் தாழ்ந்தாலும் 
இன்ஸானியத்தோடு  குரோதங்களின்றிப் 
புன்னகைக்கும் இரு பூவிதழ்களைத் தா ....................................

தாயிபின்  அளவுக்கே தடைகள் வந்தாலும் 

தாக்குதல்கள் தொடர்ந்தாலும் 
தளராமல் தஹ்வாவில் முன்னிற்க 
உறுதியானதொரு உறவைத் தா ..............................

இன்னும் கேட்கிறேன்  இறைவா 

இதயத்தை இறை நினைவிலிருந்து 
விலக்கி இப்லீஸ் இயக்க முற்படும் போதேல்லாம் 
உன் அற்புதங்களை ஆழ நோக்கி ஈமானை ஈடேற்றும் 
இரு கண்மணிகளைத் தா ..............................................

இடைவெளிகளில் போதும் 

இயக்கங்களின் போதும் 
உன் நினைவு நிறைந்த சுஜூதுகளை 
சுமக்கும் முன் நெற்றி ரோமங்களைத் தா ....

மொத்தத்தில் இறைவா 

என் - இதயத்தின் ஒரு விநாடித் துடிப்பிலும் 
என் - சுவாசத்தின்  ஒரு வினாடி மூச்சிலும் 
என் -  கண்களின் ஒரு வினாடி இமைப்பிலும் 
என் - உதடுகளின்  ஒரு வினாடி அசைவிலுமாக 
என் மொத்த உறுப்புக்களின் ஒரு விநாடித் துடிப்பிலும் 
இஹ்லாஸ் இறைத்திருப்தி  என்ற  இரு நாளங்களும்  
சங்கமிக்க  வேண்டும் .
இறை கலிமாவோடு இரத்தத்தில் 
பரிணமிக்க வேண்டும் ....................................... 
 Click here for pdf file    (இங்கே க்ளிக்செய்யவும்)                                                                    
https://images.pexels.com

                                                                    




  






   

No comments:

Powered by Blogger.