காதல் கடிதம்

காதல் கடிதம்

அன்பின் உங்களுக்கு ,  
இதுவரை ஏராளமான கடிதங்கள்  என்னை வந்தடைந்துள்ளன . இன்னும் வந்த வண்ணமே உள்ளன . உலகம் முடியும் வரை இதற்கு முடிவே இல்லை என்று நினைக்கிறேன் . ஒருவர் இருவர் அல்ல ஒட்டு மொத்த சமூகமும் என்று கூட சொல்லலாம் . அதுவும் சாதாரணக் கடிதமுமல்ல . காதல் கடிதம் .........................

கன்னியர் சங்கத்தின் தலைவி என்ற வகையில் நான் உங்கள் கடிதங்களுக்கான பதில்களைச் சொல்லியாக வேண்டும் . உங்கள் தலைவிதிகளைப் பற்றியும் எனக்கு  ஏற்பட்டுள்ள தலைவலி பற்றியும்  விளக்கியாக வேண்டும் .

இதுவரை நான் பெற்றுக்கொண்ட காதல் கடிதங்களுள்  எத்தனையோ கடிதங்களை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் . அவரவர்க்கு உரித்தானவர்களிடம் ஒப்படைத்தும் விட்டேன் . அனேகர் அவர்களுடன் இணைந்தும் விட்டார்கள் .

Roses, Heart, Mother'S Day, Flowers
https://cdn.pixabay.com

இத்தனைக்கும் எம் கன்னியர்களில் ஒருவர் கூட ஒரு தெருவில் கூட நடந்து சென்றது கிடையாது . எம் பூமுகங்களை ஒருமுறையேனும் கண்டது கிடையாது . நாமும் எம் இருப்பிடமும் என்றிருக்கிறோம் . 

அவர்கள் கேட்கும் படியாக ஒரு வார்த்தையேனும் பேசியது கூட கிடையாது . ஆனால் எம்மைப் பற்றி நீங்கள் தினமும் பேசுகிறீர்கள் . எம் கன்னியரை ஒத்த அழகைக் கூட கண்டிருக்க மாட்டீர்கள் . ஆனால் அன்றாடம் காதலிக்கிறீர்கள் . தினம் தினம் ஐந்து தடவைக்கு அதிகமாகவே கடிதமும் அனுப்புகிறீர்கள் . அதிகாலை , அந்திமாலை , நள்ளிரவு , நடுநிசி என்று அதற்கு காலம்   நேரம் கூடாக கிடையாது . உங்கள் காதலின் ஆழத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது .


Balloon, Heart, Love, Romance, Sky
https://cdn.pixabay.com
✌....✌....✌ ....✌.... ✌ ....✌  

னாலும்  காதல் என்பதற்காக கண்டதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எந்தக்  கட்டாயமும் எங்களுக்கில்லை .  கன்னியர்களாகிய நாங்கள் வித்தியாசமானவர்கள் . சிலருக்கென்றே பிரத்தியேகமானவர்கள்  . வர்ணிக்க முடியாத அழகுடையவர்கள் . எங்கள் எச்சிலுக்கே கடல் நீர் முழுவதும் சுவையாகி விடும் .  எங்கள் கண்களின் அழகை வர்ணிக்க உலகில் எதுவும் கிடையாது .  எங்களின்  வெண்மைக்கு  முத்துக்கள் கூட  ஈடாகாது . இப்படி எவ்வளவோ .................................
இவற்றையெல்லாம் நாம் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டும் என்பதில்லை .  அதையெல்லாம் அறிந்ததால் தான் எம் மீது அளவுகடந்து காதல் கொண்டுள்ளீர்கள் . ............................................

மக்கென்று  தனிச் சிறப்புக்கள்  இருப்பது போலவே எம் கன்னியர்களின் காதலர்களுக்கும் நாம் விரும்பும் பண்புகள் இருக்க வேண்டும் . 
எங்கள் காதலர்கள் , 

*   அழகிலே , அந்தஸ்திலே குறைந்தவர்களாக இருக்கலாம். அதைப்பற்றி       எந்த   ஆட்சேபமும் எங்களுக்கில்லை . 

*   அந்நிய பெண்களைத் தீண்டாதவராக  தன்  பார்வையால் கூட                            விபச்சாரம்  செய்யாதவராக இருக்க வேண்டும் .

*    பூமிப்பந்தில்  பணிவு என்கின்ற வாகனத்தை அவர் சொந்தமாக்கி                     இருக்க  வேண்டும்.

*    பாவங்களில் இருந்து வெளியேற " ஸலாம் " எனும் ஆயுதத்தை அவர்            தாங்கியிருக்க  வேண்டும் .

*    அவரது இரவுகள் இறை தியானத்திற்கு இரவல் போயிருக்க வேண்டும் .
      அந்த இரவலுக்கான  கூலியாகவே  என்னைக் கேட்க வேண்டும் . 

*    "எங்கள் இரட்சகனே  நரகத்தின் வேதனையை எங்களை விட்டும் நீ               திருப்பி   விடுவாயாக .நிசசயமாக அதன் வேதனை நிலையானதாகும் "
       (அல் - புர்கான் )  என்று   அவர் பிரார்த்திக்க வேண்டும் .

*    அவரது செல்வங்கள் வறுமைக்கு நிழலாக அமைய வேண்டும் .                            வீண்விரயமோ , கஞ்சத்தனமோ இன்றி இடைப்பட்டதாக அவரது                        செலவுகள் அமைய வேண்டும்.

*    தன்னைப் படைத்தவனுக்கு எதனையும் இணை வைக்காமல்                                 அனுதினமும்  அவனிடமே பாவமீட்சி பெற வேண்டும் .

*     பொய் சாட்சி சொல்ல மாட்டார் . வீணான கெட்ட  காரியங்களின் பால்           அகப்பட்டு விட்டால்  பணிவாக கண்ணியமாக விலகிச்                                               சென்றுவிடுவார் .

*      " எங்கள் இரட்சகனே எங்கள் மனைவியடமிருந்தும் எங்கள்                                   சந்ததிகளிடமிருந்தும்  எங்களுக்கு கண்குளிர்ச்சியைத் தருவாயாக .
          அன்றியும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை ( நல்வழி நின்று                       அதன்                பால்  அழைக்கும் ) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக                 " (அல் - புர்கான் )       என்று வேண்டி  நிற்க வேண்டும் .

*        மொத்தத்தில் இறைவனுடைய வசனங்களுக்கு முழுமையாய்                               அடிபணிந்து  நடமாடும்  குர்ஆனாக  அவர் உருப்பெற்றிருப்பார் .

அவர்களுக்குள் ஒருவராக நீங்களும் இருந்தால் காத்திருங்கள் உங்கள்                   கன்னியருக்காக . உங்களுக்கானது தூய்மையாக உங்களிடமே வந்து                     சேரும். உங்கள் காதல் கடிதமும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில்                           அணுவளவும் சந்தேகமில்லை . 

இப்படிக்கு 
கண்ணழகிகளின் தலைவி 
  زوجة عباد الرحمن 


     உங்கள் முயற்சிகள் தொடரட்டும் . சந்திப்போம் ஒரு நாளில் ...................................
❤ 



நான் நேசிக்கும் அவர் 

நான் நேசிக்கும் ஒருவரைப் பற்றி ஒரு சில உண்மைகளை மாத்திரம் உரைத்திருக்கிறேன் . அவர் என்னை நேசிக்கிறாரா  என்பதை  நான் அறியேன் . என்றாலும் நான் அவரை என் உயிரை விட அதிகமாக நேசிக்கிறேன். சில நேரம் நீங்களும் என்னைப்  போன்ற ஒருவராக இருக்கலாம் . 

படித்துப்பாருங்கள் சில நேரம் பட்டென புரியும் .
இன்னும்  சிலர்க்கு தாமதமாகும்.


 
 (இங்கே க்ளிக் செய்யவும் )           Click here
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Heart Red Leafed Tree on Red Field
https://images.pexels.com


No comments:

Powered by Blogger.