புவியியலில் தரவு , தகவல்
புவியியலில் தரவு , தகவல் என்ற இரண்டுமே முக்கியமான வகிபாகங்களைக் கொண்டுள்ளன . புவியியல் சார் ஆய்வுகளுக்கு உயிரோட்டத்தை வழங்குவதே தரவு , தகவல் ஆகியவையாகும் .
தரவு
தரவு என்பது குறித்த ஒரு விடயம் தொடர்பான அல்லது ஒரு நபர் தொடர்பான அல்லது ஏதாவதொன்று தொடர்பான தகவல்களை விஞ்ஞான ரீதியான முறைமைகளைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளப்படும் எண்சார்ந்த அல்லது கூற்று சார்ந்த பெறுமான அளவுகள் ஆகும்.
உதாரணம் : வகுப்பொன்றிலுள்ள மாணவர்களின் பொது அறிவு மட்டம்
தகவல் (information)
தகவல் என்பது பெறப்பட்ட தரவுகளை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வு செய்வதனுடாகப் பெறப்பட்ட முடிவுகள் ஆகும்.
தரவு ஒன்றினை புள்ளிவிபரவியல் செயன்முறைக்கு உட்படுத்தல் , ஒழுங்கமைத்தல் போன்றன மூலமாக தகவல் பெறப் படுகின்றது .
உதாரணம் : குறிப்பிட்ட நாட்டில் 20% ஆன பகுதியே நகரமயமாக்கப் பட்டுள்ளது .
தரவுகளின் வகைகள்
தரவுகளின் இயல்புகள் மற்றும் சேகரிக்கப்படும் முறைகளின் அடிப்படையில் அவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது .
1. முதல்நிலைத் தரவுகள் ( Primary Data)
2. இரண்டாம்நிலைத் தரவுகள் (Secondary Data)
3. பண்புசார் தரவுகள் (Qualitative Data)
4. அளவைசார் தரவுகள் (Quantitative Data)
5. தொடர்ச்சியான தரவுகள் (Continuous Data)
6. தொடர்ச்சியற்ற தரவுகள் ( Discrete Data)
1 . முதல்நிலைத் தரவுகள் ( Primary Data)
ஆய்வாளன் தன் நேரடிக் கண்காணிப்பின் கீழ் ஆய்வுக் களத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளும் தரவுகள் முதல்நிலைத் தரவுகள் ( Primary Data) எனப்படும். முதல் தடவையாக பெற்றுக் கொள்ளப்படுவதால் இவை முதல்நிலைத் தரவுகள் ( Primary Data) என அழைக்கப்படுகின்றன .
இத்தரவுகள் எந்தவித பகுப்பாய்விற்கும் உட்படுத்தப்படாத நிலையில் பச்சைத்தரவுகள் என அழைக்கப்படுகின்றன.
உதாரணமாக :- சிங்கராஜவனத்தில் காணப்படுகின்ற பறவையினங்கள் பற்றிய தரவுகளைப் பெற்றுக்கொள்ள நேரடியாக வனத்திற்குச் சென்று தரவுகளைப் பெற்றுக்கொள்ளல் .
2 . இரண்டாம் நிலைத்த தரவுகள்
ஆய்வாளன் தன் ஆய்வுக்கான தரவுகளை குறித்த ஆய்வு விடயம் பற்றிய ஏலவே சேகரிக்கப்பட்ட தரவுகளை பயன்படுத்திப் பெற்றுக்கொள்வது இரண்டாம்நிலைத் தரவுகள் (Secondary Data) எனப்படுகிறது .
உதாரணமாக :- அறிக்கைகள் , நூல்கள் , சஞ்சிகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்படுகின்ற தரவுகள் .
3. பண்புசார் தரவுகள் (Qualitative Data)
குறித்த ஆய்வு விடயம் தொடர்பான இயல்புகள் , கருத்துக்கள் ,எண்ணங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் தரவுகள் பண்புசார் தரவுகள் (Qualitative Data) எனப்படும் .
உதாரணமாக :- குறித்த பிரதேசத்தின் நீர்நிலைகளின் சுவை , நிறம் ,மணம்
பற்றிய தரவுகள்
4. அளவைசார் தரவுகள் (Quantitative Data)
குறித்த ஆய்வு விடயம் தொடர்பான எண்ணியல் சார்ந்த பெருமானங்களைக் கொண்ட தரவுகளே அளவைசார் தரவுகள் (Quantitative Data) எனப்படுகிறது .
உதாரணமாக :- குறித்த பிரதேசத்திலுள்ள நீர்நிலைகளின் Ph பெறுமானங்கள்
5 தொடர்ச்சியான தரவுகள் (Continuous Data)
தொடர்ச்சியான தரவுகள் என்பது ஒரு தொடர்ச்சியான முறையில் அளவிடக்கூடிய தரவுகள் ஆகும் . இத்தரவுகள் முழுப் பெறுமானம் கொண்டவையல்ல .
உதாரணமாக ;- வெப்பநிலை , மழைவீழ்ச்சி , வேகம் , கதி
6. தொடர்ச்சியற்ற தரவுகள் ( Discrete Data)
தொடர்ச்சியற்ற தரவுகள் என்பது வரையறுக்கப்பட்ட , தொடர்ச்சியற்ற தரவுகளாகும். இவை முழுப் பெறுமானங்களைக் கொண்டவையாகும் .
உதாரணமாக ;- மாதாந்த சம்பளம் , கும்ப வருமானம் , குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை .

https://cdn.pixabay.com

No comments: