Jump to navigationJump to search

வறண்ட நிலம்
வறட்சி  என்பது ஒரு வர‌ண்ட காலகட்டத்தைக் குறிக்கும். நீண்ட காலத்திற்கு மழைவீழ்ச்சி (பொழிவு) கிடைக்கமையால் ஏற்படுகின்ற சூழல் நிலைமையை வரட்சி என்று எளிமையாக வரைவிலக்கணப்படுத்தலாம். ஆயினும் வரட்சி பற்றிய திட்டமான வரையறை காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம் வெறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக லிபியா நாட்டில் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 180 மில்லி மீட்டர் வரை குறைவுபடுமாயின் அங்கு வரட்சி நிலையுள்ளதாகக் கொள்ளப்படும். ஐக்கிய அமெரிக்காவில் இரண்டு தினங்களுக்குள் 2.5 மில்லி மீட்டருக்குக் குறையுமாயின் அது அங்கு வரட்சி நிலையைக் குறிக்கும். இலங்கையில் அந்தந்த காலநிலை வயலத்துக்குரிய சராசரி மழைவீழ்ச்சியின் 75 சதவீதத்திற்கும் குறைவாக மழை கிடைக்கும் போது அப்பிரதேசத்தில் வரட்சி நிலவுவதாகக் கூறப்படும். பல காலமாக மழையில்லாத‌ வறண்ட மற்றும் தண்ணீர் பற்றாக்குறையுள்ள நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டது எனப்படும். இங்கு வேளாண்மை மிகவும் குறைந்த அளவிலேயே நடைபெறும். வறட்சி காணப்படும் இடங்களிள் வறுமையும் பெரிய அளவில் காணப்படும்.

வறட்சியின்  வகைகள் 

வறட்சி அதன் பாதிப்பு மற்றும் கால அளவின் அடிப்படையில் நான்கு நிலைகளைக் கொண்டதாக வகுக்கப்படும்.
  1. வானிலைசார் வறட்சி: வளமையான மழைவீழ்ச்சிக் காலத்திலும் குறைவான மழைவீழ்ச்சியின் ஆரம்பநிலை இது. இந்நிலையில் மழை குறைந்த சூழலை உணரக்கூடியதாயிருக்கும்.
  2. விவசாய வறட்சி: மண்ணிலுள்ள நீரின் அளவு குறைந்து பயிர் செய்யமுடியாத நிலை தோன்றுவது இதுவாகும்.
  3. நீரியல்சார் வறட்சி: வறட்சியான காலநிலை தொடர்ந்திருப்பதனால் நீர்நிலைகளான ஆறுகள்குளங்கள்ஓடைகள்வாவிகள் முதலானவை வரண்டு போகும் நிலை இது.
  4. சமூகப் பொருளாதார வறட்சி: தொடர்ந்த வறட்சி காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு வறுமை முதலான நிலை தோன்றுதல்.


Water scarcity from FAO Water (Food and Agriculture Organization of the United Nations

https://ta.wikipedia.org/wiki

https://www.kidhours.com

உலகில்  வறட்சியால் பாதிக்கப்படும்  பிரதேசங்கள்  

மத்திய ஆபிரிக்காவின்  சாகேல் வலயம் . ( உப ஆபிரிக்க வலயம் )
வட  அமெரிக்காவின்  மிடவேஸ்ட்  பிரதேசம் 
மத்திய அவுஸ்திரேலியா 
இந்தியாவின் மகாராஷ்ரா  , குஜராத் , ஹைதராபாத்  பிரதேசம் 
வட மேற்கு சீனா 

உலகளாவிய  ரீதியில்  வறட்சி

உலகளாவிய  ரீதியில்  நாட்டுக்கு நாடு  பிரதேசத்துக்குப் பிரதேசம்  வரட்சி பற்றிய வரைவிலக்கணங்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன .
பிரிட்டானிய காலநிலையியலாளர்கள் தொடர்ந்து 15 நாட்களுக்கு மழை பொழியாவிடின்   அதனை வறட்சி என வரைவிலக்கணம் செய்கின்றனர்.
கனடாவில் இது 30 நாட்கள் என கருதப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் இது மேலும் அதிகரிக்கின்றது.  இலங்கையில் எதிர்பார்க்கப்படுகின்ற மழைவீழ்ச்சி் 75 % க்கு   குறைவாக கிடைக்கின்ற காலப்பகுதி  வறட்ச்சியான  காலப்பகுதி என வகைப்படுத்தப்படுகிறது . 

பொதுவாக நோக்கினால் கிடைக்கின்ற மழைவீழ்ச்சி குறையும் போது அல்லது மழைவீழ்ச்சி போக்கில் ஏற்படும் வேறுபாடுகளால் மக்களுக்கு போதிய அளவு நீர் வளங்கள் கிடைக்காமல் போகும்போது  வறட்சி அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது .  பல நாட்களாக தொடர்ச்சியாக மழை கிடைக்காமல் போவது பெரும்பாலும் வறட்சி ஏற்படுவதற்கு காரணமாகிறது.




rasmiya Niyas

11:05 PM (18 minutes ago)
to me

இலங்கையில்  வறட்சி  

உலகின் பல்வேறு  நாடுகளிலும் வறட்சி என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டு வருகின்ற அதே நேரம்   இலங்கையிலும் பல வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன . வன வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் தயார் செய்யப்பட்ட காலநிலை அனர்த்தங்கள் பற்றிய அறிக்கையில்  பின்வருமாறு  குறிப்பிடப்பட்டுள்ளது . 

" இலங்கையில் எதிர்பார்க்கப்படுகின்ற மழைவீழ்ச்சியில்  75  சதவீதத்திற்குக்  குறைவாகக் கிடைக்கின்ற காலப்பகுதி வறட்ச்சியான  காலப்பகுதி என வரைவிலக்கணம் படுத்தப்படுகிறது.
எனினும்   இலங்கையினுள் வறட்சி நிலவும் காலப்பகுதிகள்  பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுகின்றன . இலங்கையின்  உலர் வலயத்தில்  மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரட்சி நிலைமை ஒன்று ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும் முழு இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலான ஒரு வறட்சி பெரும்பாலும் பத்து வருடங்களுக்கு ஒரு முறையே நிகழலாம் என்பது அனுபவத்தின் ஊடாக அறியப்பட்ட உண்மையாகும்.

வறட்சி ஏற்படுவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

காலநிலை வேறுபாடுகள்
புவிக்கோலம் வெப்பமடைதல் 
வளிமண்டலம் மாசடைதல்
காடழிப்பு 
எதிர்பாராத நீர் பற்றாக்குறை 
போன்ற பல்வேறு காரணங்கள்   வறட்சி ஏற்படுவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

வரட்சியின் பாதிப்புகளை  குறைத்துக்  கொள்வதற்கான நடவடிக்கைகள் 

மழைநீர் சேகரித்தல் 
நீர் ஊற்றுக்களைப்  பாதுகாத்தலும் தாவரப் போர்வையைப்  பாதுகாத்தலும் 
 நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தல் 
நீரை வினைத்திறனுள்ள முறையில் பயன்படுத்தும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுடல் .


வறட்சியினால்  ஏற்படும் பாதிப்புக்கள்  

தீவிர  நீர்ப் பற்றாக்குறை ஏற்படல் 
விவசாய நிலங்கள் பாதிக்கப்படல் 
மண் வளமிழத்தல் 
தாவரப்  போர்வை  பாதிக்கப் படல் .
உயிர்ப்  பல்லினத் தன்மை சீர் குலைதல் 
இயற்கை அழகு குறைதல் 
நீர் மின்சார உற்பத்தியில் தடைகள் ஏற்படல் 
நோய்கள் , பட்டினி  என்பன காரணமாக மக்களும் , விலங்கினங்களும்  பாதிக்கப்படல் 














No comments:

Powered by Blogger.