சொல்லாமல் சொல்லிக் கொள்கிறேன்

சொல்லாமல் சொல்லிக் கொள்கிறேன்  சொல்லாமல் சொல்லிக் கொள்கிறேன் 

சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ்நிலைகள்  சில போது  இயற்க்கையான எமது இயல்புகளில், பண்பாடுகளில்ந மற்றும் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மென்மையான குணம் கொண்டவர்கள் சில நேரம் கடுமையானவர்களாக  மாறிவிடுகின்றனர் .  கடுமையானவர்கள் சில நேரம் சந்தர்ப்பங்களுக்காக  ,சூழ்நிலைகளுக்காக மென்மையான இயல்புகளை மாற்றங்களாக தம்முள் ஏற்படுத்திக்க  கொள்கின்றனர் .

அறிந்தோ அறியாமலோ  இவ்வாறான மாற்றங்கள் இயல்பாகவே நிகழ்ந்து விடுகின்றன . எப்போதாவது  ஒரு நிமிடம் அமர்ந்து வாழ்வின் மாற்றங்களை பற்றி சிந்திக்கும் போது தான் இவற்றை நாம் அறியாமலே நிகழ்ந்த மர்மமான மாற்றங்களாக எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது .



                                                           https://images.pexels.com
                           
அப்படி  உணர்கின்ற சந்தர்ப்பத்தில்  இயல்புகளுக்கு  அப்பாட்பட்ட விடயங்கள்  எம்முள்  இணைந்திருப்பதை  அறியும் போது  அந்த நிமிட           வலிகளை ஜீரணிக்க  மிகவும் கஷ்டமாகவே  இருக்கும் .

அதே வேளை விளைந்திருக்கும் மாற்றங்கள் வரவேற்பானவையாக இருக்கும் போது ஏற்படும் புத்துணர்வுக்கும் புதுத்தெம்பிற்கும் மனது வழங்கும் இன்பமும் இனிமையானது ,அலாதியானது .

யதார்த்த  பூர்வாமான இந்த அம்சங்களை  இங்கு இணைக்கப் பட்டிருக்கும் குறுங் கவிதை சட்டெனப் புரிய வைக்கும் என்ற அவாவுடன் .....

click here  


(மேலே உள்ள லிங்கில் க்ளிக் செய்வதன் மூலம் கவியின் கோப்பு வடிவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் .)

சிலரின் அனுபவப்  பரிமாறர்களில் பரிமாற்றிக் கொள்ளப்பட்ட கருத்துக்களைக் கருவாகக் கொண்டும் சொந்த வாழ்வில் அனுபவப்  பேனாக்கள் எழுதிய கீறல்களை வைத்தும் இந்தக் கவியை வரைந்திருக்கிறேன் .


மரணத்தின் மறுமொழி 

இந்த வாழ்க்கை எதைத்தான் உணர்த்த விரும்புகிறது .
பிறப்பு என்ற வீதியில் ஆரம்பித்தது .
இன்னும் முடியவில்லை .
பயணம் தொடர்கதையாகத்தான் இருக்கின்றது .
இறப்பு எவ்விடம் தான் மறைந்துள்ளதோ ?

முன்பெல்லாம் எந்த ஆன்மாவின் பிரிவிற்காயும் என் 
ஆன்மா ஏங்கியதில்லை .
என் கண்கள் கலங்கியதில்லை .
என்றாலும் ஐயோ இப்போதெல்லாம் எந்த மூலையில் 
ஒரு மூச்சித் திணறினாலும் என்னால் ஸ்பரிசிக்க முடிவதில்லை .
என்னை நானாகவே  கிழித்துக் கொள்வது போன்ற ஒரு ஓர் வலி .

இத்தனை வருட வாழ்க்கையில் - என் 
மனிதம்  தந்த ஈடாகக் கூட அது இருக்கலாம் .
எத்தனை மரணங்கள் எம்மை உலுக்கினாலும் 
எத்தனை ஆன்மாக்கள் பிரிந்து சென்றாலும் 
என்றோ உள்ளம் அதை 
மறக்கத்தான் செய்கிறது .

என்னதான் நாட்கணக்காக
மாதக்கணக்காக  கண்ணீர் சொரிந்தாலும்
என்றோ ஒருநாள்
அந்த மரணமும் மறதியின் பிடியில்
கைதிகளாகி விடுகின்றது .
அதுவும் ஓர் இயற்கையின் கொடையே ......

ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொரு நிமிடமும் 
உலாகின்  ஏதோ  ஒரு மூலையில் 
பிறப்பு எனும் சந்தோஷமான நிகழ்வு போல 
இறப்பு எனும் துயரும் நிகழ்ந்து கொண்டு தான் 
இருக்கின்றது .
யாருக்காவது தாங்க முடியாத துயரைத் 
தந்து கொண்டு தான் இருக்கின்றது .

உயிர் ஒருபோதும் உடலுக்குச் 
சொந்தமில்லை என்பதை எல்லா 
மரணங்களும் உணர்த்தியே  செல்கின்றது .

***************************************************************************************

எத்தனை மரணங்கள் என்னைக் கலங்க
வைத்த போதும்
எத்தனையோ ஆன்மாக்கள்
என்னைப் பிரிந்து சென்றபோதும்
இறைவா ,
அவரது நினைவு மாத்திரம்
தான் இன்னும் என் ஆன்மாவை
இன்று வரை பிய்த்தெடுக்கிறது ......................

எல்லா இழப்புக்களும் 
இறுதியில் ஒரே ஒன்றையே 
வினவிச்  செல்கின்றன .
அந்த வினாக்களை நினைக்கும் போதே 
என்னுள்ளம் படபடக்கிறதே .
உள்ளுக்குள்ளால் யாரோ சூடேற்றுவது 
போன்ற உணர்வு அது .

அந்த வினாவுக்கு விடை காண நான் எத்தனிப்பதில்லை .
வினாவையே தாங்க முடியாத ஆன்மாவுக்கு 
விடையை எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும் .

**********************************************************************************
அண்ணலாம் பெருமானின் 
இறுதி மூச்சில் 
இறுதிப் பேச்சில் 
இறுதி எச்சிலில் 
இறுதி அரவணைப்பில் 
இறுதி ஆலோசனையில் 

அன்பிற்கினியவர் ஆயிஷா 
எதைத் தான் உணர்ந்திருப்பார் ....................???
எவ்வாறு தான் தங்கியிருப்பார் .....................???

நபியோடு படுத்துக்கிடந்து 
பழங்கதைகள் சொன்ன அந்தப் பத்தினியின் 
அன்றைய இரவு 
வெறும் பஞ்சனையோடும் 
நிந்தனையோடும் 
கழிந்திருக்குமோ ????

***************************************************************************************

தலைமை , தாராண்மை , நட்பு , 
அன்பு , வழிகாட்டல் ,
புன்னகை ,புனிதம் , பூரணத்துவம் 
எல்லாம் இணைந்து பரிமாறப்பட்ட 
அந்த உறவை 
ஒரு நொடியில் இழந்து நின்ற போது 
அபூபக்ர் ,உமர் 
இன்னும் தூய தோழர்கள் என 
எல்லோருமாக   எதனைத்தான் 
உணர்ந்திருப்பார்கள் .?
எப்படித்தான் தாங்கியிருப்பார்கள் ?

அவர்களின் ஆன்மாக்களின் உணர்வுகள் 
அன்றோடு  தொலைந்து விட்டனவோ 
நபியின் பிரியாவிடையோடு ......................................

**********************************************************************************

silhouette of person walking out from tunnel during daytime
https://images.unsplash.com

உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் வரவேற்கிறோம் .
கீழே கொமண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் .


     
by : بنت الخير ( நலவின் மகள் )


1 comment:

Powered by Blogger.